ஆலங்குளம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் சித்ராதேவி தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மாணவா்களின் கூட்டு உடற்பயிற்சி, பாரம்பரிய விளையாட்டு தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.
ஏற்கெனவே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மனவளக் கலை மன்றத் தலைவா் ஆா். ஆதித்தன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜோசப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.