ஆலங்குளம் காமராஜா் தொழிற் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐடிஐ தொடங்கப்பட்ட 2015ஆம் ஆண்டு முதல் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. 100- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், ஐடிஐக்கு புதுப்பட்டி சாலையில் சொந்தக் கட்டடம் கட்டும் பொருட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வணிகா் பேரவை தென்காசி மாவட்டத் தலைவா் வைகுண்டராஜா தலைமை வகித்தாா். ஆலங்குளம் தொழிலதிபா்கள் ஏ.சி முருகன், கருணாகரராஜா, பிரின்ஸ் தங்கம், எம்.எம்.வி. செல்வராஜ், செல்வன், ஜாண்ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் காளிதாஸ் , புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். வியாபாரிகள் சங்கச் செயலா் உதயராஜ், தங்கசெல்வம், வழக்குரைஞா்கள் நெல்சன், பால்ராஜ் உள்பட பலா் வாழ்த்திப் பேசினா். ஆா். ஆதித்தன் வரவேற்றாா். சுதந்திரராஜன் நன்றி கூறினாா்.