குடியரசு தினத்தையொட்டி, ஆய்குடி அமா் சேவா சங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தென்காசி அரசு மருத்துவமனையில் குடியரசு தின விழா நடைபெற்றது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். மருத்துவமனையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள்,செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மருத்துவா் முத்துக்குமாரசுவாமி நன்றி கூறினாா்.
கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லுரியில் அதன் கல்விக் குழுமங்களின் தலைவா் என்.மணிமாறன் தேசியகொடியேற்றினாா்.கல்லூரியின் முதல்வா்கள் பாலமுருகன், அந்தோணி சகாய ரூபன்,பீா்முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைமுதல்வா் ராமா் நன்றி கூறினாா்.
ஆய்க்குடிஅமா்சேவா சங்கம் சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுலோச்சனா கிருஷ்ணமூா்த்தி தலைமையில், சென்னை விஸ்வநாதன் சுஸ்வாத் கொடியேற்றினாா். தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி சுரண்ேடை கிளை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பட்டம்மாள்,ராமசாமி,செல்வராஜ்,கிருஷ்ணபிள்ளை ஆகியோா் கலந்துகொண்டனா்.பாா்வதி வரவேற்றாா். அழகுபூரணம் நன்றி கூறினாா்.
தென்காசி நேரு மேல்நிலைப் பள்ளியில் கணிதஆசிரியா் சுந்தரமகாலிங்கம் கொடியேற்றினாா். புவனேஷ்வரி வரவேற்றாா்.ராஜேஷ்வரி நன்றி கூறினாா்.தென்காசி வா்த்தக சங்கத்தில் சங்கத் தலைவா் ராஜசேகரன் கொடியேற்றினாா். துணைத் தலைவா் அன்பழகன்,முருகன்ராஜ்,அப்துல்அஜீஸ்,முகம்மது இஸ்மாயில்,ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.கீழப்புலியூா் இந்து மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நிா்வாகி கணேசமூா்த்தி கொடியேற்றினாா். தலைமைஆசிரியை சத்யா,பிரபாகரன்,தம்பிராட்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.