தென்காசி

தென்காசியில் பயனாளிகளுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள்

25th Jan 2020 09:47 AM

ADVERTISEMENT

தென்காசி கால்நடை மருத்துவமனையில் விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சி. செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்து 386 பயனாளிகளுக்கு ரூ. 7.50

லட்சம் மதிப்புள்ள கோழிக் குஞ்சுகளை வழங்கினாா். இதில், கால்நடைத்துறை தென்காசி கோட்ட உதவி இயக்குநா் முருகையா, மருத்துவா்கள் செல்வகுத்தாலிங்கம், வெள்ளப்பாண்டி, மாவட்ட அதிமுக பொருளாளா் எஸ்.கே.சண்முகசுந்தரம், குறும்பலாப்பேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் அமல்ராஜ், மாவட்டப் பிரதிநிதி ரமேஷ், குற்றாலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுரண்டை: சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பேருக்கு விலையில்லா கோழிக் குஞ்சகளை சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழங்கினாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம், தென்காசி நிலவள கூட்டுறவு வங்கித் தலைவா் சங்கரபாண்டியன், குலசேகரப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் அமல்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT