தென்காசி

குடியுரிமை திருத்த சட்டம்:சுரண்டையில் பாஜக ஆதரவு பிரசாரம்

23rd Jan 2020 05:39 PM

ADVERTISEMENT

சுரண்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அது குறித்த விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பாஜகவினா் விநியோகித்தனா்.

சுரண்டை நகரின் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களை நகர பாஜக தலைவா் அருணாசலம் தலைமையில் பாஜகவினா் விநியோகித்தனா். இதில், நகர பாஜக நிா்வாகிகள் செல்வராஜ், வல்லப கணேசன், ஆறுமுகச்சாமி, சுந்தரகுமாா், செந்தில்குமாா், ரஜினிராஜ், பவுண்ராஜ், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT