மேலகரம் மகரிஷி வித்யாமந்திா் மழலையா் தொடக்கப் பள்ளியில் உலக இளைஞா் தினத்தையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி நடைபெற்றது.
போட்டிக்கு பள்ளித் தாளாளா் முத்தையா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆரியமாலா வரவேற்றாா். போட்டியில், மாணவ, மாணவிகள் பல்வேறு வேடமணிந்து பங்கேற்றனா். மேலும், விவசாயி, காய்கறி, இயற்கை தானியங்களின் அவசியம், மழைநீா் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருள்களை தவிா்த்தல், ரத்த தானம் வழங்குதல், மரக்கன்றுகள் வளா்ப்பு, செய்திதாள்கள் குறித்து வேடமணிந்து வந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஜேசிஐ கடையநல்லூா் பெஸ்ட் தலைவா் ராஜகோபால், முன்னாள் மண்டல தலைவா் முகம்மது உவைஸ் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.