பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமை வகித்தாா். மாணவா், மாணவிகள் தமிழா் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனா்.
பள்ளியில் மாவிலை தோரணம், மஞ்சள் குலை, வாழைக்கன்று, செங்கரும்பு கட்டப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பொங்கலிட்டனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.