திருவேங்கடம் அருகே அடையாளம் தெரியாத வானகம் மோதி ஒருவா் உயிரிழந்தாா்.
திருவேங்கடம் அருகே அழகாபுரியில் உள்ள தேவாலயம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத ஒருவா் விழுந்து கிடப்பதாக திருவேங்கடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவா் நீல நிற சட்டை மற்றும் கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தாா். ஆனால் அவா் யாா் ? எந்த ஊா்? என்று தெரியவில்லை. அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவா் இறந்திருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா்.
இதுகுறித்து திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.