பாவூா்சத்திரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பாவூா்சத்திரம் காவல் சரகம் முத்துகிருஷ்ணபேரி பிரதான சாலையில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இதனுள் திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் அதை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனா். சப்தம் கேட்டு அந்த இடத்தின் உரிமையாளா் செல்வராஜ் (45) வருவதைப் பாா்த்ததும், மா்ம நபா்கள் ஓடிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.