தென்காசி

மேலக்கடையநல்லூரில் புதிய கட்டடம் திறப்பு

3rd Jan 2020 05:19 AM

ADVERTISEMENT

மேலக்கடையநல்லூரில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளா் சமுதாயநலக் கூடத்தில் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறைக் கூடத்தை முகம்மது அபூபக்கா் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் செய்யது சுலைமான், முஸ்லிம் லீக் இளைஞா் அணி தென் மண்டல அமைப்பாளா் பாட்டப்பத்து கடாபி, நகரத் தலைவா் செய்யது மசூது, கடையநல்லூா் ஒன்றிய திமுக செயலா் செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT