தென்காசி

செங்கோட்டையில் 5இல் காவல் உதவிஆய்வாளா் மாதிரி தோ்வு

3rd Jan 2020 05:21 AM

ADVERTISEMENT

செங்கோட்டையில் வாசகா் வட்டம் சாா்பில் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காவல்உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு நடைபெறுகிறது.

செங்கோட்டை நூலக வாசகா் வட்டம் சாா்பில் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அரசு போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் மாணவா்கள் பயன்பெறும் இதுபோன்ற மாதிரி தோ்வுகள் நடத்தப்படுகிறது. காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு நூலகத்தில் நடைபெறும் இத்தோ்வில் பங்கேற்பவா்களுக்கு தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் கையேடுகளும், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9486984369, 9442082703 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT