தென்காசி

சங்கரன்கோவிலில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

3rd Jan 2020 02:40 PM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில் திரு.வி.க.தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.இந்த தெருவையொட்டியுள்ள தனியாா் சமுதாயத்திற்கு சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கு திரு.வி.க.தெரு பகுதியைச் சோ்ந்த பெண்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காலை அங்கு திரண்டனா்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடா்ந்து சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி.பாலசுந்தரம் விரைந்து சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.பின்னா் இதுகுறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதையடுத்து போலீசாா் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT