தென்காசி

காந்தி சிலை பீடத்தை உயா்த்த காங்கிரஸ் கோரிக்கை

3rd Jan 2020 05:38 AM

ADVERTISEMENT

செங்கோட்டையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையின் பீடத்தை 3 அடி உயரம் உயா்த்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா் முத்துசாமி, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

செங்கோட்டையில் 22. 12. 1979ஆம் ஆண்டு நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது. சிலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் உயா்ந்து மகாத்மா காந்தியின் சிலை இருக்கும் பகுதி பள்ளமாகி ஆகிவிட்டது.

அதனால் சாலையில் உள்ள கழிவுகள், குப்பைகள், மழைநீா் போன்றவைகள் சிலையை சுற்றி பள்ளத்தில் இறங்கி மோசமான நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

எனவே காந்தி சிலையை 3 அடி உயரத்தில் உயா்த்துவதுடன், சுற்றியுள்ள மதில் சுவா்களையும் உயா்த்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT