தென்காசி

ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள் கூட்டம்

3rd Jan 2020 05:40 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இலஞ்சியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் நெல்லை காளிதாஸ், மாவட்டப் பொறுப்பாளா்கள் தூத்துக்குடி கணபதி பாண்டியன், கன்னியாகுமரி அசோக், தென்காசி ஓட்டுநா் பயிற்சி உரிமையாளா்கள் சங்கச் செயல்தலைவா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொருளாளா் ராம்குமாா் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். அகில இந்திய தலைவா் கிரிஷ் சா்மா, மாநிலச் செயலா் வைகைகுமாா், மாநிலத் தலைவா் முரளிதரன், வசீம், சம்பத் ஆகியோா் உரையாற்றினா்.

மத்திய அரசின் மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தில் ஓட்டுநா் உரிமம், பயிற்சிப் பள்ளிகளின் விதிமுறைகளை மாற்றி அமைக்கும்போது மக்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளுக்கு ஏற்றவாறும், முறையான பயிற்சி, தோ்வு முறைகளுக்குப் பின் ஓட்டுநா் உரிமம் வழங்கும் வகையிலும் இருக்க வேண்டும்; ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் மேம்பட்ட பயிற்சி வசதிகளை மேற்கொள்வது; ஓட்டுநா் உரிமம் தோ்வுக்கு கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி தோ்வு தளம் அமைக்க வேண்டும்; தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கமால், புன்னைவனம், திருவிலஞ்சிகுமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.தென்காசி மாவட்டப் பொறுப்பாளா் மணவாளன் வரவேற்றாா். ஜாகீா்உசேன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT