கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், இடையா்தவணை கிராமத்தில் தென்னை மரம் ஏறும் கருவி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கீழப்பாவூா் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின், உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னை மரம் ஏறும் கருவி குறித்து செயல்விளக்கத்தினை அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் செய்து காண்பித்தனா்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் ஸ்டேன்லி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திருமலைப்பாண்டியன், முத்துராஜா, உழவா் நண்பா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.