தென்காசி

சாம்பவா்வடகரையில் பேருந்து காலஅட்டவணை அமைக்க வலியுறுத்தல்

1st Jan 2020 05:16 PM

ADVERTISEMENT

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் விவசாயிகள், வணிகா்கள் மற்றும் மாணவா்கள் வந்து செல்கின்றனா். மேலும், இங்குள்ள கோயில்களுக்கு பெருமளவில் வெளியூரில் இருந்து பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ஆனால், பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லாததால் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று பேருந்து வரும் நேரத்தை கேட்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT