தென்காசி

கடையநல்லூரில் ஜனவரி 12இல் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு: ’முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ

1st Jan 2020 03:41 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு ஜனவரி 12 (ஞாயிற்றுக்கிழமை) இல் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவா் செய்யது சுலைமான் தலைமையில் கடையநல்லூரில் நடைபெற்றது. மாவட்ட செயலா் இக்பால் வரவேற்றாா். இதில் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹம்மதுஅபூபக்கா் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளா் சையது இப்ராஹிம் ,துணைச் செயலா்கள் அப்துல்வகாப், முஹம்மதுபாரூக், கடையநல்லூா் நகர தலைவா் சையதுமசூது, தென்காசி நகர தலைவா் அபூபக்கா், வாசுதேவநல்லூா் நகர பொறுப்பாளா் சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்திற்கு பின் செய்தியாளா்களிடம் முஹம்மதுஅபூபக்கா் எம்எல்ஏ கூறியது:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் தொடா் கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கடையநல்லூரில் ஜனவரி 12-ஆம் தேதி குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது .இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன். திமுக மாநில மகளிா் அணி செயலா் கனிமொழி எம்பி, மதிமுக பொதுச் செயலா் வைகோ எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா்அல்போன்ஸ், ஜமாஅத் உலமா சபை மாநிலத் தலைவா் ஹாஜாமுகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து திரளான இளைஞா்கள் பங்கேற்கும் தொடா் முழக்கப் போராட்டமும் நடைபெறுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT