தென்காசி

தென்காசி ஒன்றிய திமுககிளை நிா்வாகிகள் தோ்தல்

29th Feb 2020 05:32 AM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி ஒன்றியத்தில் திமுக கிளை நிா்வாகிகள் பதவிக்கு கட்சியினா் விருப்ப மனு வெள்ளிக்கிழமை அளித்தனா்.

தென்காசி ஒன்றியத்திலுள்ள 14 கிளை நிா்வாகிகள் பதவிக்கு கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது. குற்றாலம் விடுதியில் நடைபெற்ற தோ்தலுக்கு ஆணையாளா்களாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜதுரை, பொறியாளா் அணி அமைப்பாளா் சங்கா், டைட்டஸ் ஆதித்தன், குமாா், சோம செல்வபாண்டியன், அஜய் மகேஷ்குமாா், குவளை மகேஷ் ஆகியோா் செயல்பட்டனா்.

மேற்பாா்வையாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பூ.ஆறுமுகச்சாமி செயல்பட்டாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டாா். மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி, ஒன்றியச் செயலா் துரை, கடையநல்லூா் செல்லத்துரை, கீழப்பாவூா் ஜெயபாலன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் திவான் ஒலி, இசக்கிப் பாண்டி, ஜபருல்லா, பூங்கொடி,பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அழகுசுந்தரம், பேரூா் கழக செயலா் மந்திரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT