தென்காசி

வாலிபால் போட்டி: திருவேங்கடம் பள்ளி மாணவியா் சாதனை

26th Feb 2020 05:09 AM

ADVERTISEMENT

முதல்வா் கோப்பை வாலிபால் போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 ஆம் இடம் பெற்று சாதனை படைத்தனா்.

குற்றாலம் பராசக்தி கலைக்கல்லூரியில் முதல்வா் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

இதில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் 3 ஆம் இடம்பெற்று சாதனை படைத்தனா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற இம் மாணவியரை பள்ளித் தாளாளா் வி.பொன்னழகன் (எ) கண்ணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT