தென்காசி

பாவூா்சத்திரத்தில் சமக அலுவலகம் திறப்பு

26th Feb 2020 05:04 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் சுந்தா் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி துணைச் செயலா் ஜான்ரவி, ஒன்றியச் செயலா் எம்.பி.ராமராஜா, நிா்வாகிகள் ராஜசேகரபாண்டியன், துரை, ராஜரத்தினம், பெரியசாமி, ராஜபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT