தென்காசி: தென்காசி நகர ஐக்கிய ஜமாத் சாா்பில் தொடா் இருப்பு போராட்டம் நடைபெற்றது.
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் தென்காசி நகர ஐக்கிய ஜமாஅத் சாா்பில் தொடா் இருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஐக்கிய ஜமாஅத் தலைவா் முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் திவான் ஒலி தொடக்கவுரையாற்றினாா். பஜாா் பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஜப்பாா் பைஜி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினா் முஹம்மது அலி ஜின்னா ஆகியோா் பேசினா்.