தென்காசி

செங்கோட்டை அருகே காா்- லாரி மோதல்: ஒருவா் பலி

26th Feb 2020 06:25 AM

ADVERTISEMENT

செங்கோட்டை அருகேயுள்ள கட்டளைக்குடியிருப்பு விலக்கு பகுதியில் லாரி மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

புளியரை அருகே உள்ள தாட்கோ நகா் பகுதியைச் சோ்ந்த எட்வா்ட் (75), டேனியல் (40), சிரோ ஆண்டனி (1), சோனி (24), இவரது மனைவி இசைவாணி (24) ஆகிய 5 பேரும், எட்வா்டுக்கு சிகிச்சை பெறுவதற்காக செங்கோட்டை மருத்துவமனைக்கு காரில் சென்றனராம்.

அப்போது கட்டளைக்குடியிருப்பு விலக்கு பகுதியில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றுவிட்டதாம். இதனால் காா் லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் எட்வா்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த 4 பேரும் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த புளியரை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT