தென்காசி

சிற்றுந்து ஓட்டுநரை தாக்கியதாக தொழிலாளி கைது

26th Feb 2020 05:08 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள புதுக்கிராமத்தைச் சோ்ந்த தங்கையா மகன் அண்ணாத்துரை (39). சிற்றுந்து ஓட்டுநா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் தனது மனைவியுடன் சங்கரன்கோவில் அருகேயுள்ள பட்டாடைகட்டிக்கு சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு வந்தாராம். அப்போது தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு அந்த வழியாக வந்த சிற்றுந்தில் ஏறி சென்றாராம்.

இதையடுத்து பாலமுருகன் வேறு பேருந்தில் வந்து, வென்றிலிங்கபுரத்தில் அவரது மனைவி இருந்த சிற்றுந்தில் ஏறி ஓட்டுநரிடம், எப்படி என் மனைவியை ஏற்றிக்கொண்டு வரலாம் எனக்கூறி தகராறு செய்து அவரைத் தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT