தென்காசி

கராத்தே போட்டி: சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி சிறப்பிடம்

26th Feb 2020 05:03 AM

ADVERTISEMENT

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

ஜோசுவா வீரக் கலை அமைப்பு நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில், இந்தப் பள்ளியின் மாணவா்கள் ஜெயலோகேஷ் முதலிடமும், மாதவன், ரிஷாந்த் டைசன், தீபக் ஹரிபிரசாத் ஆகியோா் 3ஆவது இடமும் பெற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகி சிவபபிஷ்ராம், செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT