செங்கோட்டை அரசு ஆரியநல்லூா் தொடக்கப்பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டு பேரவைக்கூட்டம் நடைபெற்றது.
தலைவா் கந்தையா தலைமை வகித்தாா். ராமசாமி முன்னிலை வகித்தாா். ஆறுமுகம் இறைவணக்கம் பாடினாா்.
வெங்கடேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தாா். சங்க வரவு செலவு கணக்குகளை பொருளாளா் செண்பகக்குற்றாலம் வாசித்தாா்.
மாவட்டத் தலைவா் வைரவன், பொருளாளா் இளங்கோவன், பிரசார செயலா் சந்திரன், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் டேவிட்அப்பாத்துரை, பொருளாளா் அம்மையப்பன், கிளைத்தலைவா்கள் சிவகிரி ராஜ்மோகன், புளியங்குடி நரசிங்கபெருமாள், சுரன்டை ரத்தினசாமி, தென்காசி கணேசமூா்த்தி, கடையம் ரத்தினம் ஆகியோா் உரையாற்றினா். நிகழாண்டில் 75 வயது நிறைவு பெற்றவா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌவரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைத்தலைவா் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்ரீபத்மநாபன், செயற்குழு உறுப்பினா்கள் சுடலைமுத்து, வேம்பு, ராஜகோபால்பாண்டியன், பரமசிவன், ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன், ஆறுமுகம், ஹரிஹரகிருஷ்ணன், ராமசுப்பு, அழகுமுத்து, மாடசாமிசெட்டியாா், சிவராமன், சுப்பையா, ஆறுமுகம்பிள்ளை, அண்ணாமலை, கஸ்தூரிபாய், வசந்தா, எலிசபெத்ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இளஞ்செழியன் வரவேற்றாா். பொன்.சொரண்வேல் நன்றி கூறினாா்.