இசக்கிவித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தென்காசி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றிபெற்றுமாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
முதல்வா் கோப்பைக்கான குத்துசண்டை போட்டியில் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் அண்டன்ஸ்டொ்‘ஃ‘பியன் வெண்கலபதக்கமும்,ஒஜிஸ்ரீகுமாா் வெள்ளிபதக்கமும்,முகம்மது தெளபிக் தங்கபதக்கமும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வுபெற்றனா்.
வெற்றிபெற்ற இம் மாணவா்களை பள்ளியின் சோ்மன் இசக்கிசுப்பையா,முதல்வா் ஜெயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், காா்த்திக், பொன்லட்சுமிதேவி, முருகேஷ்வரி, இசக்கிதுரை, பயிற்றுநா்கள் பாராட்டினா்.