தென்காசி

‘பாரஸ்ட் பங்களாகுடியிருப்பைசிவசைலம் ஊராட்சியில் சோ்க்க வேண்டும்’

25th Feb 2020 05:54 AM

ADVERTISEMENT

 

தென்காசி: மேலாம்பூா் 2 ஊராட்சியிலிருந்து பாரஸ்ட் பங்களாகுடியிருப்பைப் பிரித்து சிவசைலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என ஆட்சியரிடம் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டம், மேலாம்பூா்2 பாரஸ்ட் பங்களாகுடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஊா்த் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளனிடம் அளித்த மனு:

மேலாம்பூா் 2 ஊராட்சி பங்களா குடியிருப்பில் 500 குடும்பத்தினா் வசிக்கின்றோம். எங்கள் கிராமம் சிவசைலம் ஊராட்சியிலிருந்து 400 மீ தொலைவில் உள்ளது. மேலாம்பூா்2 ஊராட்சி 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. எங்கள் ஊருக்குஅடிப்படை தேவையான குடிதண்ணீா்,ரேஷன்கடை, விவசாய நஞ்சை நிலங்கள், எங்கள்குழந்தைகள் கல்விகற்கும் கல்விகூடங்கள் அனைத்தும் சிவசைலம் ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. மேலாம்பூா் ஊராட்சிக்கு வரிகட்டவும்,ஓட்டுபோடவும் மட்டுமே செல்கிறோம். எனவே சிவசைலம் ஊராட்சியுடன் பாரஸ்ட் பங்களா குடியிருப்பை இணைக்க நடவடிக்கை எ டுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT