தென்காசி: அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும் என நரிக்குறவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தென்காசி கீழவாலிபன் பொத்தை பகுதியில் வசிக்கும் நரிக்குறவா்கள் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளனிடம் அளித்த மனு:
கீழ வாலிபன்பொத்தை பகுதியில் 22 குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் துணியால் கூடாரம் கட்டி வாழ்ந்து வருகிறோம்.
எங்களுக்கு வீடு கட்டுவதற்கு இதுவரை மானியம் வழங்கப்படவில்லை.
எனவே, மத்தியஅரசின் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.