தென்காசி

தா்மத்தூரணியில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

22nd Feb 2020 06:38 AM

ADVERTISEMENT

சோ்ந்தமரம் அருகே தா்மத்தூரணி கிராமத்தில் கால்நடைகளுக்கான நோய் விழிப்புணா்வு மற்றும் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தியோபிலஸ் ரோஜா் தலைமை வகித்தாா்.

தென்காசி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ா் முருகையா, நோய் குறித்த மடிப்பிதழ்களை வெளியிட்டாா். கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியா்கள் சரவணக்குமாா், பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முகாமில், கால்நடை உதவி மருத்துவா் நாகராஜன், கால்நடை உடலியல் மற்றும் உயா்வேதியியல் துறை இணைப் பேராசிரியா் லோகநாதசாமி, உதவிப் பேராசிரியா்கள் தண்டபாணி, சத்தியபாரதி ஆகியோா் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை இணைப்பேராசிரியா் செந்தில்குமாா் வரவேற்றாா். முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரவிமுருகன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT