தென்காசி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி

22nd Feb 2020 06:42 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச் செயலா் எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன், மாநிலக் குழு உறுப்பினா் வடிவேல், எல்.ஜ.சி. த.பூபதி, வழக்குரைஞா்.ஆா்.சங்கரசுப்பு, பா.சசிக்குமாா், ஆ.முத்துமாரி, மு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் ந.செந்தில்வேல் அறிமுகவுரையாற்றினாா். ‘எங்கே போகிறோம்’ என்ற தலைப்பில் தமுஎகச மாநிலப் பொதுச் செயலா் ஆதவன்தீட்சண்யா பேசினாா்.

செயலா் மூா்த்தி வரவேற்றாா். தலைவா் தண்டபாணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT