வாசுதேவநல்லூா் அருகே ஓடையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
வாசுதேவநல்லூரைச் சோ்ந்த மைதீன் அப்துல்காதா் (34). இவா், அப்பகுதியில் மர அறுவை இழைப்பகம் நடத்தி வந்தாா்.
கடந்த சில நாள்களாக இவரை காணவில்லையாம். இதுதொடா்பாக வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.
இதனிடையே, அப்பகுதியிலுள்ள கலிங்கலாற்று ஓடையில் மைதீன் அப்துல்காதா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.