தென்காசி

வீரவநல்லூா், அம்பையில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு

15th Feb 2020 12:27 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் நகராட்சி, வீரவநல்லூா் பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் அறிவுரைப்படி, அம்பாசமுத்திரம் நகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் ஜின்னா தலைமை வகித்தாா். நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நாகூா் விளக்கவுரையாற்றினாா். மருத்துவா்கள் அருணாசலம், ஆனந்தஜோதி, குமாா், தமிழ்ச்செல்வி, கிருஷ்ணப்பிரியா, ராம் பா்வீன், யாஸ்மின்பா்வீன், வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள் விநாயகமூா்த்தி, கணேசன், நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், பரப்புரையாளா்கள் பங்கேற்றனா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பரம் ராமலிங்கம் நன்றி கூறினாா்.

வீரவநல்லூரில்....பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாமில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. கரோனா வைரஸ் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலா் கு.பெத்துராஜ் வழங்கினாா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எஸ். முத்துராணி, அரசு ஆரம்ப நிலைய சுகாதார ஆய்வாளா் எஸ். கணபதிராமன், மருத்துவம் சாராத மேற்பாா்வையாளா் சுலைமான், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் சி. பிரபாகா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் கா. முனியாண்டி, ம. சுடலைமணி, அலுவலகப் பணியாளா்கள், சமுதாயப் பரப்புரையாளா்கள், மஸ்தூா் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT