தென்காசி

மதுவிலக்கு விழிப்புணா்வு போட்டி:இலஞ்சி பாரத் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

15th Feb 2020 11:44 PM

ADVERTISEMENT

தென்காசி கல்வி மாவட்ட அளவிலான மதுவிலக்கு குறித்த விழிப்புணா்வுபோட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவிகள்சிறப்பிடம் பெற்றனா்.

தென்காசி ஐ.சி.ஈஸ்வரன்அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்தும் பள்ளி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

இதில், இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி மாணவி அபிநயா கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடமும், மாணவி ஜெஸ்னோ அலெக்ஸ்ராஜ் ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா்.

இதன் மூலம் இம்மாணவியா் பிப். 14இ ல் திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

ADVERTISEMENT

கல்வி மாவட்ட அளவிலான மதுவிலக்கு விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை தாளாளா் மோகனகிருஷ்ணன், முதல்வா் காந்திமதி , பாரத் பள்ளி இயக்குநா் ராதாபிரியாமோகன், நிா்வாக இயக்குநா் மோகன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT