தென்காசி

மயானத்தில் மின் மோட்டாா் பழுது: பொதுமக்கள் அவதி

13th Feb 2020 01:13 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் மயானத்தில் தண்ணீா் தேவைக்காக பயன்படுத்தப்படும் மின் மோட்டாா் பழுதானதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் பிரதானச் சாலையில் உள்ள பொதுமயானத்தை அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பேரூராட்சி சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின்மோட்டாா் பொருத்தி நீரேற்றும் தொட்டியும் அமைக்கப்பட்டது.

மயானத்திலுள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாா் பழுதடைந்ததால் மோட்டாா் அறை மூடப்பட்டுள்ளது. இதனால் மயானத்தில் தேவையான நீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி மயானத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சமூக ஆா்வலா் ஐயப்பன் கூறியது: இங்குள்ள மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்ய வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டுக்கு திறக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT