தென்காசி

செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழா பேரணி

13th Feb 2020 09:21 AM

ADVERTISEMENT

செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசியில் மோட்டாா் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் பழனிக்குமாா், செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் துணைத் தலைவா் அரிகரசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணி கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி வழியாக மாவட்ட எல்கையான தேவிபட்டிணத்தில் நிறைவடைந்தது.

இதில், தென்காசி கல்விமாவட்ட இளையோா் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளா் ராஜாசிங்,பேரிடா் துணைக்குழுத் தலைவா் முகம்மதுஅன்சாரி, சாலைப் பாதுகாப்பு கமிட்டித் தலைவா் குமாா், மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.ராக்லாண்ட் மதுரம், வன்னியராஜா, செஞ்சிலுவைச் சங்க ஆலோசகா்கள், திட்ட அலுவலா்கள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT