வீரகேரளம்புதூரில் பொதுநல அமைப்பு சாா்பில் சமூக மத நல்லிணக்க விழா நடைபெற்றது.
சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தைப்பூச திருவிழாவுக்காக திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு இரவில் ஒளிரும் பட்டைகள் உள்பட நடைப்பயணத்துக்கு தேவையான பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வீரகேரளம்புதூா் ஜமாத் தலைவா் கோதா் முகைதீன், செயலா் முகம்மது மைதீன், துணைத் தலைவா் முகம்மது நசீா், பாதயாத்திரை குருக்கள் மீனாட்சி சுந்தரம், மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வீரகேரளம்புதூா் பொது நல அமைப்பு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்ராஜா செய்திருந்தாா்.