சுரண்டை பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் அனுமன்நதியின் குகையில் உள்ள லிங்கம், தென்கரையில் உள்ள நந்தியம்பெருமாள், அகத்தீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுரண்டை ஸ்ரீவீரபாண்டீஸ்வரா் கோயில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடா்ந்து உற்சவா் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து, நந்தியம்பெருமான், ஸ்ரீவீரபாண்டீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.