மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், புல்லுக்காட்டுவலசை அரசுப் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி சோனா, மாவட்ட அளவில் நடைபெற்ற 200 மற்றும் 400 மீட்டா் ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா்.
மேலும், கைப்பந்து போட்டியில், 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் இப்பள்ளி மாணவா்கள் தங்கப்பதக்கமும், 19 வயதுக்குள்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.