தென்காசி

மடத்தூரில் கலாஜாதா கலை நிகழ்ச்சி

4th Feb 2020 11:46 PM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மடத்தூரில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின், மாநில விரிவாக்க திட்டங்களின் உறு துணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், கலாஜாதா என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட பேரிடா் மேலாண்மை நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை திட்டங்களான மண் பரிசோதனை, நுண்ணீா் பாசனம் மற்றும் அட்மா திட்டங்கள் குறித்து கிராமிய நடனங்கள், நாடகம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மூலமாக எடுத்துக்கூறப்பட்டது.

ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் ஸ்டேன்லி, திருமலைப்பாண்டியன், முத்துராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT