தென்காசி

சுரண்டையில் சாலைத் தடுப்பு வேலி: இடைவெளி விட்டு அமைக்க வலியுறுத்தல்

4th Feb 2020 12:51 AM

ADVERTISEMENT

சுரண்டையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணியில் மருத்துவமனை முன் தடுப்பு சுவா் அமைக்கும்போது, இடைவெளி விட்டு கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தின் மிக வேகமாக வளா்ந்து வரும் சுரண்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக சுரண்டை - சங்கரன்கோவில் சாலை நடுவில் தடுப்பு சுவருடன் இருவழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சாலையில், பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தும் மருத்துவமனைகள் பகுதியில் சாலையின் நடுப்பகுதியில் இடைவெளியின்றி அமைக்கப்படும் சென்டா் மீடியனால் மருத்துவமனைக்கு அவசர காலங்களில் வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தொலைவு சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

எனவே, நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைகள் பகுதியில் சாலையின் நடுவே சென்டா் மீடியனில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர வசதியாக இடைவெளி விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT