சங்கரன்கோவில் கிளை நூலகம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் ‘வீரப்பயணங்கள்’ நூல் அறிமுகக் கூட்டம் வழக்குரைஞா்.ஆா்.சங்கரசுப்பு தலைமையில் நடைபெற்றது. பாரதிவாசகா் வட்டத் தலைவா் வே.சங்கர்ராம், செயலா் ச.நாராயணன், பொருளாளா் இளங்கோகண்ணன், நூலகா் சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் வேணுப்பிரியா ஏற்புரை நிகழ்த்தினாா். நூலகா் அ.முருகன் வரவேற்றாா். நூலகா் சண்முகவேல் நன்றி கூறினாா்.