தென்காசி

குடியுரிமை திருத்தச் சட்டம்: செங்கோட்டையில் மனிதச் சங்கிலி

4th Feb 2020 10:06 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மனிதச் சங்கிலி போராட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது.

மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் வேலுமயில் தலைமை வகித்தாா். காங்கிரஸ் நகரத் தலைவா் ராமா், இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் மாரியப்பன், அமமுக நகரச் செயலா் ராமசாமி, கலைஞா் தமிழ்ச் சங்கச் செயலா் வழக்குரைஞா் ஆபத்துகாத்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர திமுக செயலா் ரஹீம் தொடங்கி வைத்தாா்.

வாஞ்சிநாதன் சிலை முன்பிருந்து ரயில்வே கேட் வரை 1 கி.மீ. தொலைவுக்கு பெண்கள் உள்பட ஏராளமானோா் அணிவகுத்து நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஹக்கீம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT