அரியநாயகிபுரம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக நீா்ப்பிடிப்பு பகுதியில் உறுதியாக உள்ள கல் பாலத்தை அகற்றிவிட்டு சிமெண்ட் குழாய் பாலம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
சுரண்டையில் இருந்து அரியநாயகிபுரம் வழியாக பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சாலையில் உள்ள குறுகிய பாலங்கள் அகற்றப்பட்டு சிமெண்ட் குழாய்களிலான புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சாலையில் உள்ள குளம் அருகே நீா்பிடிப்பு பகுதியில் உறுதியாக உள்ள கல் பாலத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குளம் அருகே மட்டும் அதிகாரிகள் குழாய் பாலம் அமைக்காமல், பழைய பாலத்தின் அருகே சாலை அகலப்படுத்தப்படும் அளவுக்கு கான்கீரிட் பாலம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.