தென்காசி

அண்ணா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

4th Feb 2020 09:09 AM

ADVERTISEMENT

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், தாய்கோ வங்கி துணைத் தலைவா் குற்றாலம் என்.சேகா், அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், குற்றாலம் பேரூா் செயலா் கணேஷ் தாமோதரன், தென்காசி நகரச் செயலா் சுடலை, பேரூா்க செயலா்கள் காா்த்திக் குமாா், மயில்வேலன்,

ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் லாட சன்னியாசி, கூட்டுறவு வீட்டுவசதி தலைவா் சுரேஷ், பேச்சாளா் முகிலன்,அரசு வழக்குரைஞா் சின்னத்துரை பாண்டியன், அசோக்பாண்டியன், சாந்தசீலன், இலஞ்சி மாரியப்பன், அன்னமராஜா, ரமேஷ், குற்றாலம் ஜெயலலிதா பேரவை செயலா் சாலிக்குட்டி பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT