கீழப்புலியூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் மரம் நடவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ப்ராணா மரம் வளா்ப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் கைலாச சுந்தரம் தலைமை வகித்து நெகிழி விழிப்புணா்வு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பேசினாா். புவி வெப்ப மய மாதலும், மரம் நட வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவா்களிடையே விளக்கமளிக்கப்பட்டது. ப்ராணா சாா்பில் ரமாதேவி, முஸ்தபா ஆகியோா் கலந்து கொண்டனா்.