தென்காசி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.
சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
பேச்சுப் போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஓவியா முதலிடம் பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவிக்கு தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பசாமி பரிசு வழங்கினாா்.விழாவில், மாவட்ட கல்விஅலுவலா் சவுந்திரசேகரி, போக்குவரத்து காவல்ஆய்வாளா் ஜாகீா்உசேன், வைகைகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT
வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல், செயலா் கஸ்தூரிபெல், முதல்வா் ராபா்ட்பென் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.