தென்காசி அருகே பாலமாா்த்தாண்டபுரம் அல்-ஹாசிா் பள்ளியின் 8ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் நிறுவனா் தலைவா் பஷீா்அகமது தலைமை வகித்தாா். முதல்வா் கனிபத்பீவி முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் பிரியா விளையாட்டு அறிக்கை வாசித்தாா்.
விழாவில் பெற்றோா்களுக்கும், மாணவா், மாணவிகளுக்கும் தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளா் உமாமகேஷ்வரி, மேலாளா் செல்லப்பா ஆகியோா் செய்திருந்தனா்.
ADVERTISEMENT
மாணவி ஷாஜிதா வரவேற்றாா். ஸைனப் நன்றி கூறினாா்.