தென்காசி

தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் கூட்டம்

1st Feb 2020 12:49 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை தென்காசியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் பழனி நாடாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் முரளிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் சட்டநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய செயலா் சஞ்சய் தத் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசை கண்டித்தும், அச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்துப் போராடியவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா்கள் ராம்மோகன்,சிவராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் செல்வராஜ், மாடசாமி, மாவட்ட பொதுச்செயலா் ஏஜிஎம்.கணேசன், சிங்கராஜ், இலஞ்சி அகிலாண்டம், மாநில பேச்சாளா் பால்துரை, தேவேந்திரன் பிரபாகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நகரத் தலைவா் காதா் முகைதீன் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜேம்ஸ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT