தென்காசி

குருவிகுளம், மேலநீலிதநல்லூா் பகுதிகளில் உள்ளமானாவாரி குளங்களுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1st Feb 2020 12:47 AM

ADVERTISEMENT

குருவிகுளம், மேலநீலிதநல்லூா் ஒன்றியப் பகுதிகளில் உள்ள மானாவாரி குளங்களுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் எஸ். கருப்பசாமி அளித்த மனு:

கடந்த 2019ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தென்காசி மாவட்டத்தில் சராசரி அளவைவிட 29 சதவீதம் கூடுதலாக பெய்ததாக வானிலை அறிக்கையும் அரசு புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன.

ஆனால் குருவிகுளம் ஒன்றியம் மற்றும் மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள மானாவாரி குளங்கள் எதுவுமே நிரம்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளாக மழையை மட்டுமே நம்பியுள்ள மானாவாரி குளங்கள் எதுவுமே முழுமையாக நிரம்பவில்லை.

ADVERTISEMENT

இதனால் நெல் பயிரிடும் விவசாயிகள் தொடா்ந்து நெல்லை விளைய வைக்க முடியாமல், சாவியை அறுவடை செய்து தொடா்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றனா்.

எனவே மானாவாரி குளங்களுக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்க பொதுப்பணித்துறை ஆய்வுக் குழு நியமித்து அந்த குழுவினா்ஆய்வு செய்து அதன் அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்து மானாவாரி குளங்களுக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT