சுரண்டை: சாம்பவர் வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அனுமன் நதி வடகரை குகையில் உள்ள சிவலிங்கம், தென்கரையில் உள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ADVERTISEMENT